ஓர் உயிரி புவியின் தகவமைப்புக்கு ஏற்ப தன்னைப் படிப்படியாக மாற்றிக் கொள்வதை பரிணாமம் என்றும், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஏற்படும் உடனடி விளைவுகளை திடீர் மாற்றம் என்றும், தனக்கு ஒத்துவராத ஒரு சூழலை எதிர்த்து நிற்பது அல்லது அதை தனக்கு ஏற்றவாறு மாற்ற நடைபெறும் சிரமமிகு போராட்டம் புரட்சி என்றும் அறியப்படுகின்றன.
Survival of the fittest மற்றும் Wildlife is full of killing and violence $$$$
விலங்குகள் வேட்டையாடுவதை மனிதன் காணும் போது அது கொடூரமாக தோன்றுகிறது. ஆனால், கொடிய விலங்குகள் என்று பெயர் பெற்றுவிட்ட விலங்குகள் இரை தேடுவது என்பது சாதாரண விஷயமில்லை. 10 முயற்சியில் ஒரு முயற்சிதான் பலிக்குமாம். அவை பல வாரங்கள் பட்டினி கிடக்கும் நிலமையுமுண்டு. எனவே, இப்போதெல்லாம், படமெடுக்கும் போது, அப்பாவியான மான் குட்டியை ஒரு சிறுத்தை கொல்கிறது என்றால் படமெடுப்பவர் தடுப்பதில்லை. ஏனெனில் அங்கு, நாலு சிறுத்தை குட்டிகள் தாய் கொண்டுவரும் உணவிற்காக ஏங்கி நிற்கின்றன. உண்மையில் சாகபட்சிணிகளைவிட, சிறுத்தை, புலிக்குட்டிகள் உயிர்பிழைத்து பெரியவைகள் ஆவது துர்லபம் என்று ஆய்வுகள் சுட்டுகின்றன. எனவே அங்கு நடப்பது எதுவும் கொடுமையானதல்ல.
முட்டை ஒரு செல்தான். கருவுறுதல் என்பதைப் போன்றதொரு மந்திரச்செயல் உலகில் வேறேதுமில்லை. நேற்று யானை கருவுறுதலைப்பற்றிய படம் பார்த்தேன். நம்மைப் போல் கட்டிப் புரண்டு கலவி செய்ய யானையால் முடியாது. தாட்டியான உடம்பு. எனவே யானைக் கலவி என்பது சில விநாடிகளில் முடிந்துவிடுகிறது. ஆனால் 500 மிலிலிட்டர் விந்துவைப்பாய்ச்சுகிறது யானை. இதில் மனித விந்தணு போல் 10 மடங்கு அதிகம் விந்துக்கள் உள்ளன. ஆயினும் அவை மனித உடலைப் போலல்லாமல் யானையின் உடலுக்குள் சென்று கருவுறச்செய்வதற்குள், மிகக்கடினமான பாதைகளை, தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளது. இத்தனை கோடி விந்துவில் கடைசியில் ஒரேயொரு விந்து குட்டியானை உருவாகக் காரணமாகிறது. கருவுற்ற பின் 22 மாதங்கள் கர்பவாசம்!
பாம்புகள் மிகவும் தனித்துவமான விலங்குகள். கால்கள் இல்லை, முன்
கால்களும் இல்லை. இருப்பதெல்லாம் தாடையும் உடலும்தான். பரிணாம வளர்ச்சியில் மிக சிக்கனமாக வடிவமைக் கப்பட்ட ஆனால் வெற்றி கரமான விலங்கு பாம்பு. இதுவே அவற்றை பூமியின் சிறந்த வேட்டை விலங்காக வைத்திருக் கிறது.
எனக்கு மிகவும் பிடித்த அல்லது ஆர்வமுடன் வாசிக்கும் ஒரு விஞ்ஞானத்துறை பரிணாமம். என்னை மிகவும் கவர்ந்த விஞ்ஞானிகளுள் முக்கியமானவரும் முதன்மையானவரும் சார்லஸ் டார்வின்.
நியூட்டன், கலிலியோ, ஐன்ஸ்டீன், நீல் போர், மாக்ஸ் பிளான்க், ஹாக்கிங்ஸ், ஃபியன்மேன் எனப்பல உலப்புகழ் பெற்ற விஞ்ஞானிகள் சிறந்த கண்டுபிடிப்புகளையும், அறிவியல் சித்தாந்தங்களையும் முன்மொழிந்த சிந்தனையாளர்கள் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லையெனினும், அவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுப் பயன்படுத்துமொரு நியூட்டனின் புகழ்பெற்ற வாசகம் "On the shoulders of the giants". பலரது சிந்தனைகளைப் புரிந்து கொண்டு பின்னர், புரிதலின் விளிம்புகளை மாற்றியும் திருத்தியும் அமைத்தனர் என்பதற்கான ஒரு தன்னிலை விளக்க வாசகமாக இதனை நோக்கலாம்.
ஆனால், இயற்கை பற்றிய ஒரு ஆழமான மற்றும் அகன்ற பார்வையையும், சில தாவர மற்றும் உயிரியல் ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய சிந்தனையைத் தோற்றுவித்து அச்சிந்தனை முறையையே டார்வினிஸம் என்று அழைக்குமளவிற்கு ஒரு புதியசெய்தியை உலகுக்கு அறிவித்தவர் டார்வின்.
மேலும், பூமியில் தோன்றி ஊன்றிய பல்வேறு கலாச்சாரங்கள், மற்றும் அக்கலாச்சாரக் குழுக்களின் நம்பிக்கைகள் எனப் பலவகைப்பட்ட மனித சமூகக் குழுக்களுள் இருந்த ஒற்றுமைகளுள் ஒன்று படைப்புத்தத்துவம். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ படைப்புத்தத்துவம் மனிதச் சமூகத்தின் அடிப்படை நம்பிக்கைகளுள் ஒன்றாகயிருந்தது. அப்படியானதொரு சூழலில், மொத்த உலகத்தின் பார்வையிலிருந்து தனித்து ஒரு சிந்தனை மற்றும் அதன்பயன் எழுந்த மாற்றுப்பார்வையை முன்வைப்பது என்பது எளிதல்ல.
டார்வினின் 200வது பிறந்த ஆண்டாக கொண்டாடும் வேளையில் இவ்வாண்டின் முதல் இடுகை டார்வின் குறித்து எழுதநேர்ந்ததில் மகிழ்ச்சி.Survival of the fittest மற்றும் Wildlife is full of killing and violence $$$$
விலங்குகள் வேட்டையாடுவதை மனிதன் காணும் போது அது கொடூரமாக தோன்றுகிறது. ஆனால், கொடிய விலங்குகள் என்று பெயர் பெற்றுவிட்ட விலங்குகள் இரை தேடுவது என்பது சாதாரண விஷயமில்லை. 10 முயற்சியில் ஒரு முயற்சிதான் பலிக்குமாம். அவை பல வாரங்கள் பட்டினி கிடக்கும் நிலமையுமுண்டு. எனவே, இப்போதெல்லாம், படமெடுக்கும் போது, அப்பாவியான மான் குட்டியை ஒரு சிறுத்தை கொல்கிறது என்றால் படமெடுப்பவர் தடுப்பதில்லை. ஏனெனில் அங்கு, நாலு சிறுத்தை குட்டிகள் தாய் கொண்டுவரும் உணவிற்காக ஏங்கி நிற்கின்றன. உண்மையில் சாகபட்சிணிகளைவிட, சிறுத்தை, புலிக்குட்டிகள் உயிர்பிழைத்து பெரியவைகள் ஆவது துர்லபம் என்று ஆய்வுகள் சுட்டுகின்றன. எனவே அங்கு நடப்பது எதுவும் கொடுமையானதல்ல.
முட்டை ஒரு செல்தான். கருவுறுதல் என்பதைப் போன்றதொரு மந்திரச்செயல் உலகில் வேறேதுமில்லை. நேற்று யானை கருவுறுதலைப்பற்றிய படம் பார்த்தேன். நம்மைப் போல் கட்டிப் புரண்டு கலவி செய்ய யானையால் முடியாது. தாட்டியான உடம்பு. எனவே யானைக் கலவி என்பது சில விநாடிகளில் முடிந்துவிடுகிறது. ஆனால் 500 மிலிலிட்டர் விந்துவைப்பாய்ச்சுகிறது யானை. இதில் மனித விந்தணு போல் 10 மடங்கு அதிகம் விந்துக்கள் உள்ளன. ஆயினும் அவை மனித உடலைப் போலல்லாமல் யானையின் உடலுக்குள் சென்று கருவுறச்செய்வதற்குள், மிகக்கடினமான பாதைகளை, தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளது. இத்தனை கோடி விந்துவில் கடைசியில் ஒரேயொரு விந்து குட்டியானை உருவாகக் காரணமாகிறது. கருவுற்ற பின் 22 மாதங்கள் கர்பவாசம்!
பாம்புகள் மிகவும் தனித்துவமான விலங்குகள். கால்கள் இல்லை, முன்
கால்களும் இல்லை. இருப்பதெல்லாம் தாடையும் உடலும்தான். பரிணாம வளர்ச்சியில் மிக சிக்கனமாக வடிவமைக் கப்பட்ட ஆனால் வெற்றி கரமான விலங்கு பாம்பு. இதுவே அவற்றை பூமியின் சிறந்த வேட்டை விலங்காக வைத்திருக் கிறது.

Super
ReplyDeleteஅருமையான பதிவு. பரிணாமத்தைப்பற்றி மிக விரிவாக எழுதுங்கள். படிப்படியான மாற்றம் சடுதிமாற்றம் (mutation) அடைவதைப் பற்றி மறந்துவிடாமல் எழுதுங்கள்.
ReplyDelete